உலகை விடாமல் துரத்தும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவால் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், உலகளவில் இந்த கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 40,14,311 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 2,76,237 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டதில் 13,85,581 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது வரை கொரோனா வார்டில் 23,52,493 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 லட்சத்து 22 ஆயிரத்து 154 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் ஆயிரத்து 687 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,299 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,117 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,68,408 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,201 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,185 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,168 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில்உள்ளனர். இதையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,241 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 211,364 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக உலகிலேயே இந்த நாடுகள் தான் கொரோனாவால் அதிக இழப்புகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago