சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனாவில் தற்போது புதியதாக “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது.
கொரோனா வைரஸ் பற்றி மேலும் படிக்க…
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுவாசப்பிரச்சினை காரணமாக உயிரிழக்கின்றனர்.வூஹான் நகரில் உறவினர்களை பார்த்து விட்டு வீடு திரும்பிய தாய்லாந்து , ஜப்பான், தென்கொரியா , அமெரிக்கா , வியட்நாம், சிங்கப்பூர் ,மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சார்ந்த 32 பேருக்கு இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…