கொரோனாவால் தன் நாடு சீரழிந்து வரும் நிலையில் ஜெர்மனியில் ஆடம்பர ஹோட்டலில் 20 பெண்கள் மற்றும் பணியாட்களுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தாய்லாந்து மன்னர் பற்றிய தகவல்கள் வெளியாகி கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
உலகம் முழுவதும் தனது கொடூர மின்னல் வேகப்பரவல் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து கண்டுபிடிக்கபடாத இந்த தொற்றுக்கு மருந்து தனிமைப்படுத்துதல் தான் என்கின்றனர் மருத்துவர்கள் அதாவது தன்னைத் தானே தனிமைப்படுத்துதல் இதுவே பரவும் கொரோனாவிலிருந்து தப்ப மக்கள் மேற்கொள்ளும் வழியாகும்.அவ்வாறு மக்கள் தற்போது தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவை எதிர்த்து வருகின்றனர்.
மேலும் வெளியே செல்வதையும் தவிர்த்து வரும் நிலையிலும் இதன் பரவல் சற்று குறைந்தப்பாடு இல்லை இந்நிலையில் நாடு முழுவது பரவியதன் விளைவாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் இதன் பரவலுக்கு தாய்லாந்தும் விதிவிலக்கா என்ன?தாய்லாந்தில் இதுவரை 1,651 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.மேலும் அவர்களுள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் மன்னர் ஆட்சி அனைவரும் அறிந்ததே அந்நாட்டு மன்னர் “வஜிராலங்கொர்ன்” ஜெர்மனியில் உள்ள ஆடம்பர சொகுசு நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியது.மன்னர் 67 வயதாகும் “வஜிராலங்கொர்ன்” ஆன்பைன் என்ற ரிசார்ட்டில் இருக்கும் கிராண்ட் ஹோட்டல் சோனேன்பிச்சியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.தனிமைப்படுத்தல் நல்ல விஷயம் தான் ஆனால் மன்னர் தன்னை தனிமைப்படுத்திய விஷயத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் நூறுக்கும் மேற்பட்டோரை திருப்பி அனுப்பிவிட்டதாம்.நட்சத்திர ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்த தனது பரிவாளங்களோடு சென்ற மன்னர் தன் 4 மனைவிகளையும் அழைத்து சென்றாரா? என தெரியவில்லை. வழக்கம் போல ஏராளமான பணியாட்களோடு அங்கு சென்ற மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவே சென்றுள்ளார் என சர்வதேசத்தில் இருந்து விமர்சங்கள் பறக்கின்றன.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…