பெற்றோர் ஆசியோடு காதல் திருமணத்தை நடத்தி வைக்கும்- ஈஸ்வரன்.!காதல் திருமணம் நடக்க இந்த கோவிலுக்கு போங்க.?நிச்சயம் நடக்கும்
- பெற்றோர் ஆசியோடு காதல் திருமணத்தை நடத்தி வைக்கும் ஈஸ்வரன்
- பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்து முடிந்ததும் தம்பதிகள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
காதல் திருமணம் அதுவும் பெற்றோர் சம்மத்தத்துடன் நடக்க வேண்டும் என்பதே காதலிப்பவர்களின் பெரும் கனவாக இருக்கும்.அப்படி காதலர்கள் வணங்க வேண்டிய கோவில் நாகபட்டினம் மாவட்டம் குத்தலாத்தில் அமைந்துள்ளது.
கோவில் தல வரலாறு :
பார்வதி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று சிவனை நோக்கி பரதமாமுனிவர் கடும் தவம் இருந்தார்.அவரின் தவத்தை ஏற்ற சிவ பெருமான் பார்வதி தேவியை பரதமாமுனிவரின் யாக குண்டத்தில் குழந்தையாக பிறக்கச் செய்தார்.
பரிபூரண சிவபக்தையாக விளங்கிய பார்வதி சிவனையே கணவனாக எண்ணி அவர் மீது காதல் கொண்டாள்,மணலில் சிவலிங்கத்தை அமைத்து மனம் உருக வணங்கி வந்தார். பார்வதியின் உண்மையான அன்பை உணர்ந்து நேரில் தோன்றிய சிவன் தேவியின் கரங்களை பற்றி உடன் வருமாறு அழைக்க தேவியோ இல்லை சுவாமி நான் உங்களை நேசிப்பதும்-விரும்புவதும் உண்மையே ஆனால் என் தந்தையின் சம்மதத்தை முதலில் பெறுங்கள் அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியவுடன் சிவன் அங்கிருந்து மறைந்தார்.
தேவி சிவ பெருமானின் நினைவிலேயே இருந்து தன்னை வருத்தி கொண்டு வந்த நிலையில் சிவ பெருமான் சில காலம் கழித்து நந்தீஸ்வரை தேவியின் தந்தை பரதமா முனிவரிடம் மணம் பேச அனுப்பி வைக்கிறார்.நந்தீஸ்வரரும் இறைவன் இட்ட ஆனையை நிறைவேற்றும் விதமாக பரதமா முனியிடம் மணம் பேசுகிறார்.
திருமணத்திற்கு மகிழ்வுடன் பரதமா முனி சம்மதம் தெரிவிக்கவே இறைவனுக்கும்-இறைவிக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு குத்தாலத்தில் சிறப்பாக திருமணம் நடந்தது.இதன் காரணமாக தான் சிவனுக்கு அங்கு கோவில் அமைக்கப்பட்டது.பெண் ஊர் என்பதால் இறைவன் பாதுகையோடு திருமணத்திற்கு வந்தார்.அவருக்கு நிழல் அளிக்க கயிலாயத்தில் இருந்த உத்தாலம் மரமும் உடன் வந்தாக தல வரலாறு கூறுகிறது.இத்தலத்தின் தல விருட்சமாக உத்தால மரமே விளங்குகிறது.மேலும் உத்தாலம் என்பது குத்தாலம் என மருவி உள்ளது.
இந்த திருத்தலத்தில் இறைவன் உத்தவேதீஸ்வர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.அம்பாள் அரும்பன்ன வனமூலை நாயகி என்ற பெயரில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். அமிர்தமுகிழாம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
திருமணத்தலமாக விளங்கும் இந்த தலத்தில் வழிப்பட்டால் திருமணம் கைக்கூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.மேலும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்ய விரும்புவர்கள் தங்கள் இருப்பிடத்திலே இருந்து கொண்டு மனம் உருகி வழிபடுகின்றனர்.
இறைவன்-இறைவியின் அருளால் இரு வீட்டார் ஆசியோடு காதலன் அல்லது காதலியை கரம் பிடித்த பின் தம்பதிகளாக இந்த தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்ற பழக்கம் உள்ளது.