மோசமான படமென்றால் விமர்ச்சிப்பதும், வெற்றி படமென்றால் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்வதுமே சினிமா வாழ்க்கை என்று நடிகர் அர்ஜுன் கபூர் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகரும் , தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் மகனுமான அர்ஜூன் கபூர் கடந்த 8 வருடங்களாக பல படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் இவ்வாறு இருந்தால் தான் சிறந்தது என்று பல கருத்துக்களை முன் வைத்துள்ளார் . நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை ஒருபோதும் தலையில் ஏற்றி கொள்ள கூடாது . ஏனெனில் அது எப்போது வேண்டுமானாலும் மாறி விடும் . ஒரு நடிகரின் வாழ்க்கை என்பது மோசமான படத்தை கொடுத்தால் நல்ல நடிகன் இல்லை என்பார்கள்.
அதே வெற்றி படமென்றால் சூப்பர் ஸ்டார் என்ற ரேஞ்சுக்கு பேசுவார்கள் . இவ்வாறு நடிகரின் வாழ்க்கை ஒரு வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமையில் மாறி விடும் . எனவே நடிகராக இருக்கும் வரை செய்யும் பணியை சிறப்பாக ரசித்து செய்ய வேண்டும் . எவரை பற்றியும் எந்த விஷயத்தையும் அனுமானிக்காமல் இருக்க வேண்டும், உண்மையை உணர்ந்து அமைதியாக இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார்
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…