கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் – ரஷ்யா எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது.

இதனிடையே, உக்ரைன் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள பல நாடுகள் பொருளாதார உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா மீது இன்னும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரால் சர்வதேச பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவில் வர்த்தகம் செய்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் பின்வாங்கியுள்ளனர். போக்குவரத்து பிரச்னையும் இருப்பதால் ரஷ்யா எண்ணெய் விற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எண்ணெய் ஏற்றுமதியில் 70% முடங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  மே மாத விநியோகத்திற்கான பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.13 டாலராக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை இந்த உயரத்தை தொடுவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 10.5 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விற்பனை செய்தது. ரஷ்யாவில் எண்ணெய் விலைகள் உயர்வதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், அதை வாங்குபவர்கள் பெரும் முடக்கத்தை எதிர்கொள்கின்றனர். இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரால் ஒன்றுக்கு 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் ஒருமித்த முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

58 minutes ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

4 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

4 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

5 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

8 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

8 hours ago