கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருவதாக நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமான நிக்கி கல்ராணி ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இவர் தற்போது கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸூடன் இணைந்து தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார். தனக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும், அதனையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி மருத்துவர்களின் பரிந்துரைகளின் படி அனைத்தையும் பின்பற்றி தற்போது நலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வெளியே இருந்து தன்னை நன்றாக பார்த்து கொண்ட எனது நெருக்கமானவர்களுக்கு நன்றி என்றும், அனைத்து முன்னணி சுகாதார பணியாளர்களுக்கும் குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு சுகாதார பணியாளர்களின் நிலையான ஆதரவுக்காக இதயம் கனிந்த நன்றி என்றும் கூறியுள்ளார். தற்போது அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…