பிரபலங்களும், மனிதர்களும் மட்டும் அழவில்லை. அவர் நட்ட மரங்களும் தான் அழுகின்றன. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய்.
நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்த நிலையில், விவேக்கின் பூத உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நல்ல சகோதரனை இழந்து விட்டேன்.
இன்று, பிரபலங்களும், மனிதர்களும் மட்டும் அழவில்லை. அவர் நட்ட மரங்களும் தான் அழுகின்றன. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…