தனுஷிற்கு ஜோடியாகும் இரண்டு இளம் ஹீரோயின்கள்..?

ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகிய இருவரும் தனுஷிற்கு ஜோடியாக D44 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “மாறன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், இந்த தனுஷிற்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும், இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். அதாவது, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025