மாரி2 பட வில்லனான டொவினோ தனது குழந்தையின் பெயரை ‘தஹான்’ என்று அறிவித்துள்ளார்.
டொவினோ தோமஸ், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் டொவினோ வில்லனாக அறிமுகமானார். இவருக்கென்று பெண் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் என்றே கூறலாம்.சமீபத்தில் இவர் நடித்த பாரன்சிக் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
டொவினோ தோமஸ், தனது காதலியான லிடியா என்ற பெண்ணை 2014ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே லிசா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இவரது மனைவி இரண்டாவதாக கர்ப்பமாகிய நிலையில், தற்போது இந்த தம்பதியிருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டொவினோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார் . இதனையடுத்து தற்போது தனது மகள் மற்றும் மகனுடன் இணைந்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, எனது பையனிடமிருந்து கண்களை எடுக்க முடியவில்லை என்றும், நாங்கள் அவருக்கு ‘Tahaan Tovino’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், நாங்கள் அவரை ‘Haan’ என்று அழைப்போம் என்றும், எல்லா அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…