தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது
இந்த படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஆடுகளம் படத்தின் கதையை போல் இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய வெற்றிமாறனுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் டுவிட்டர் பக்கத்தில் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது ரசிகர் நீங்கள் தனுஷ் – வெற்றிமாறன் படத்தை தயாரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்ப, அவரும் ஆமாம் என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் என்பது உறுதியாகியுள்ளது.
தற்போது நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ்க்காக செம வெயிட்டிங்கில் உள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படமும், இந்தியில் ஒரு படமும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று வெற்றிமாறன் சூரி அவர்களை வைத்து சிறிய பட்ஜெட் படமும், சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கவுள்ளார்.இதில் சூரி படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து தனுஷின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…