தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதுப்பேட்டை 2 படத்தை இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து தனுஷூம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
2006ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் டீ ஜெய் ரவீக் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருந்தார் இயக்குநர் செல்வராகவன். இதிலும் தனுஷ் அவர்களே நடிக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தினை குறித்த மாஸ்ஸான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் புதுப்பேட்டை 2 படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குநர் செல்வராகவனுடன் உடன் திரைக்கதையை எழுதுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கேட்டதிலிருந்து புதுப்பேட்டை 2க்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…