அரசு பொதுத்தேர்வில் இடம்பெற்ற தனுஷின் அசுரன் திரைப்படம்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படம், திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொதுத்தேர்வில், அசுரன் திரைப்படம் சம்பந்தமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த வினாத்தாளில், ‘தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ புகழ்பெற்ற வெக்கை என்னும் புதினத்தை அடிப்படையாக கொண்டதாகும். வெக்கை என்னும் புதினத்தின் ஆசிரியர் யார்?’ என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025