விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா எனும் திரைப்படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அந்த பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் ட்ராப் ஆனது. அதனை, அடுத்து இயக்குனர் பாலா உடனடியாக ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் அதற்கான கதை மற்ற வேலைகள் என படம் தொடங்க தாமதம் ஆனது.
பின்னர், ஆர்யா மற்றும் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்தும் சூர்யாவின் கதை கூறினார் பாலா. சூர்யாவின் கால்ஷீட் கிடைத்து உள்ளது ஆதலால் சூர்யா – பாலா கூட்டணி உருவாகும் என தகவல்கள் வெளியாகின.
தற்போது இந்த அனைத்து செய்திகளும் உண்மையாகி உள்ளன. அதாவது, நடிகர் சூர்யா, ஆர்யா, அதர்வா, ராணா இந்த நால்வரையும் வைத்து இயக்குனர் பாலா ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பிந்து மாதவி ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மேலும், மற்ற நடிகர் நடிகைகள் விவரம் சூட்டிங் எப்போது தொடங்கும் என மற்ற விபரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் பாலா திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…