சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் டீசர் இப்போது எல்லாம் வெளியிட வாய்ப்பு இல்லை என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் கோப்ரா படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ என்ற அழகான பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது .இந்த நிலையில் தற்போது இயக்குநர் ஞானமுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பேசுகையில் ரசிகர் ஒருவர் படத்தின் டீசர் எப்போது என்று கேட்க, இயக்குநர், டீசர் இப்போது வெளிவராது, ஏனெனில் அதனை தயாரிக்க நீண்ட நேரம் ஆகும் என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…