கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் இயக்குநர் ஷங்கர்..!!

கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் இயக்குநர் ஷங்கர் வழங்கியுள்ளார்.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இயக்குனர் ஷங்கர் கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார். இதற்கு முன்பு சூர்யா அவரது குடும்பத்தினர் மற்றும் அஜித், சௌந்தர்யா ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோர் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025