தவறான செய்திகளை இணையதளங்களில் பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை சரத்குமார் வெளியிட்டுள்ளார்.
நடிகரும், அகில சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதாவது அவர் தனது கட்சியை கலைத்து விட்டு வேறொரு கட்சியில் சேர போவதாக சில செய்திகள் வெளியாகின. அது மட்டுமின்றி சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்தை சாதி ரீதியாக சரத்குமார் அணுகியதாகவும் விமர்சனம் செய்து வந்தனர். இது குறித்து சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,நான் கணிதம் பயின்று விட்டு சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையை துவங்கி சைக்கிள் பழுது பார்ப்பவனாக, பத்திரிகை நிருபராக, பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக. நடிகராக, சமூக சேவகனாக, பிறர் நலம் விரும்பியாக, அரசியல்வாதியாக பயணித்த அனுபவத்தில் எழுதுகிறேன்
தரமான, நேர்மையான, பத்திரிகை, தொலைக்காட்சிகள் இணையதளம் நடுவே ஒரு சில இணைய செய்திகள் தருகின்ற சகோதரர்களுக்கு….
தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை காட்டு தீ போல் பரப்புவதில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி, உங்கள் தவறான ஆய்வு செய்யாத உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை அவர்கள் அடையும் துயரங்களில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி பலரிடம் நம் பதிவு சென்றடைந்து விட்டது, நினைத்ததை சாதித்து விட்டோம், ரேட்டிங் உயர்ந்துவிட்டது, வசூல் அபாரம் என்ற மகிழ்ச்சியில் உங்களுக்கெல்லாம் உணர்வே கிடையாதா? மனசாட்சி என்பதை இறக்கி வைத்து விட்டீர்களா?
பேனா முனையின் வலிமையை எதற்கு பயன்படுத்த வேண்டும், உங்கள் அறிவை ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும் என்ற உணர்வே உங்களைப் போன்றவர்களுக்கு கிடையாதா? உங்களைப்போல பதிவிட்ட செய்தி உண்மையா? இல்லையா? என தெரிந்து கொள்ளாமல் சோசியல் மீடியா என்ற சக்திமிக்க ஆயுதத்தை பயன்படுத்தி மஞ்சள் பத்திரிக்கைக்கு சவாலாக நீங்களும் நீங்களெல்லாம் இருப்பதில் வேதனை அடைகிறேன், வெட்கப்படுகின்றேன்.
நான் என் குடும்பம், என் வாழ்க்கைப் பயணம், உங்களைப் போன்றவர்களுக்கு சற்று எரிச்சலாகத்தான் இருக்கும். ஒருவன் என்று வீழ்வான் என்று காத்துக் கொண்டிருக்கும் கூட்டமாயிற்றே நீங்கள். உழைத்து வாழ்கிறவனின் ஏற்றம் வேதனைதான் தரும்.இந்த பழம் புளிக்கும் என்று தான் நினைக்க தோன்றும்.
என் வாழ்க்கையின் சோகங்களை, வேதனைகளை, தாய் தந்தையரின் இழப்பு, சகோதரர் இழப்பு, பொருளாதாரப் பின்னடைவு, தோல்விகள், அவதூறுகள், இவைகளெல்லாம் தாங்கி வாழ்க்கை என்பது வாழ்வதற்கு, வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். அதிலும் நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பிறர் வீழ்ச்சியில் அல்ல என் முயற்சியில் இருக்க வேண்டும் என்று பயணிப்பவன் நான்.
என் பயணத்தின் எல்லை, இலக்கு, இவைகளை நன்கு அறிந்தவன் நான். விடாமுயற்சி தடைகற்களை உடைத்தெறியும் வலிமை, என் தமிழ் உறவுகளின் ஆதரவு, என்னை வெற்றி பெறச் செய்யும். பிறர் நலனுக்காக நம் மக்களுக்காக தவறான பதிவுகளுக்கும் செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்தால் அதையும் செய்தியாக்கி பொருளாதார உயர்வு பெற விரும்பும் உங்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியையும் நான் தர விரும்பவில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…