அமெரிக்கா பறக்கும் தனுஷ்.! எந்த படத்திற்காக தெரியுமா.?

Published by
பால முருகன்

நடிகர் தனுஷ் D43 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.அதை முடித்த பின்னர் தனுஷ்
தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் . பிப்ரவரி ‌9-ம் தேதி முதல் துவங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் முதல் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலில் D43 படத்தின் படப்பிடிப்பை தான் தனுஷ் முடிக்கவுள்ளதாகவும்,அதன் பின்னரே ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தி க்ரே மேன் படத்தினை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கவுள்ளனர்.ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் ஆக உருவாக இருக்கும் இந்த படம் மார்க் க்ரேனேவின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

4 hours ago