அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.இதனை கண்டித்து தல அஜித் வெளியிட்ட அறிக்கையில் சரியான நேரத்தில் வலிமை அப்டேட் வெளிவரும் என்றும்,இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். சமீபத்தில் வலிமை படத்தினை விஜய்யின் மாஸ்டர் படத்தினை போன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்த இரண்டே வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது . இந்த நிலையில் தற்போது வலிமை படத்திற்கான மோஷன் போஸ்டர் மற்றும் ஃ பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.
வாஷிங்டன் : 2025 ஜூலை 14 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க்…
சென்னை : ஜூலை 15 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான காமராஜர் பிறந்த நாள்…
லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள்,…
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…