வலிமை படகின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டத்திலிருந்து ஒரு அப்டேட் கூட விடாததால் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காமல் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும் என்று காத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…