கொரோனாவால் வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தை இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் நன்கொடையாக வழங்கிதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது . அதில் முக்கியமாக இசை கலைஞர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மூலம் 100 இசைக்கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக மேடை கச்சேரிகளும், பட வாய்ப்புகளும் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர் இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட இசை கலைஞர்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா அவர்கள் நன்கொடை வழங்கி உதவியதாக கூறப்படுகிறது. ஆம் தலா ரூ. 10 லட்சம் வீதம் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா நன்கொடை வழங்கியதாக திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தலைவரான தீனா தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட இசை கலைஞர்களுக்கு டி. இமான், ஹிப்ஹாப் ஆதி, மற்றும் அனிருத் ஆகியோர் தலா 3 லட்சமும், தமன் அவர்கள் 1 லட்சமும், விஜய் ஆண்டனி மற்றும் ஜிப்ரான் அவர்கள் தலா ரூ. 50,000வீதமும் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிடைத்த பணத்தில் தலா ரூ. 2000வீதம் ஒவ்வோரு இசை கலைஞர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…