போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங் அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
தெலுங்கு திரையுலககில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களுக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு காவல் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ராணா, தருண், ரவிதேஜா, நந்து, தனீஷ், நவ்தீப் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், சிறப்பு புலனாய்வு குழு இதனை விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, நடிகர்கள் நவ்தீப், தருண், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட 12 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்திற்கு கடந்த 31-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் உட்பட மீண்டும் பழைய பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சம்மன் அனுப்பபட்டத்தை அடுத்து, நடிகை ரகுல் பிரீத் சிங் அமலாக்கதுறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…