நடிகர் பிரசன்னா சமூக வலைத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனை ஆவிஷமுண்டோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று வைத்து அழைக்கப்பட்டது. இந்த காட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் துல்க்கருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. அதனையடுத்து அவர் தமிழ் மக்கள் அனைவரிடமும் தனது நியாயத்தை விளக்கி மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதனையடுத்து பிரபல நடிகரான பிரசன்னா அவருக்கு ஆதரவாக பேசி விளக்கமளித்திருந்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் டயலாக்ஸ் போன்று அந்த பெயரும் ஒரு பிரபலமான பழைய திரைப்பட உரையாடலிருந்து எடுக்கப்பட்டது. அன்புள்ள மக்களே நான் அந்த பெயரில் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பை பரப்ப கூடாது என்று கூறியுள்ளார். மேலும் மலையாள திரைப்படங்களை பார்த்த ஒரு தமிழன் என்ற முறையில், படத்தில் அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று எனக்கு புரிகிறது. தவறான புரிதலுக்கும், தேவையற்ற அனைத்து துஷ்பிரயோகங்களுக்கும் துல்க்கரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சுரேஷ் கோபி படத்தில் புகழ்பெற்ற ‘ஓர்மாயுண்டோ ஈ முகம்’ என்ற வசனத்தை போலவே இந்த பெயரும் பயன்படுத்தப்பட்டதாக நான் காண்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் தற்போது இந்த சர்ச்சைகளுக்கு எதிராக துல்க்கரை கண்டித்து வருவதோடு அவரின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி தற்போது துல்க்கருடன் நடிகர் பிரசன்னாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், மேலும் அவரது குடும்பத்தையும் இந்த விவகாரத்தில் இருப்பதை கண்டு வருத்தத்தில் உள்ளாராம் பிரசன்னா. இதனால் அவர் சமூக வலைத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…