கொரோனா தொற்றின் காரணமாக பிரபல குணசித்திர நடிகரும் நகைச்சுவை நடிகருமாகிய பாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. தினமும் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதிலும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் தான் நடிகர் பாண்டு. இவருக்கு தற்போது 74 வயது ஆகிறது.
இவருக்கு பாண்டு மற்றும் குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று ஆண் மகன்கள் உள்ளனர். இவர்கள் கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தையும் தற்பொழுது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாண்டு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து பாண்டு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நலையில் பாண்டுவின் மனைவி ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…