அருண் விஜய்யின் அடுத்த படம் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியுடன் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான பிரமேம் மற்றும் நேரம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. பிளாக் பஸ்டர் ஹிட்டான பிரமேம் படத்தை அடுத்த படத்திற்கான பணியை தொடங்கியுள்ளதாகவும், அந்த படத்தை தமிழில் உருவாக்கவுள்ளதாகவும், அதன் திரைக்கதை தயார் என்றும், அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் அவருடன் அருண்விஜய் நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது ஒரு பெரிய பட்ஜெட் படமென்பதால் சில நாட்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல இயலாமல் இருந்ததாகவும், தற்போது இதனை விரைவில் தொடங்க இருப்பதாகவும், கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இதன் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…