சவுதி அரேபியா அரசு சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து சமீபத்தில் வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரொனா வைரஸ் ஆதிக்கம் செலுத்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பிரிட்டன் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால், பிரிட்டன் அரசு விமான போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த தடையானது ஒரு வாரத்துக்கு தொடரும் என்றும், பரவல் அதிகமாக காணப்படும் பட்சத்தில் அதற்கு மேலும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவி வரும் புது வைரஸ் அச்சத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.
மேலும் புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு பிரிட்டன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியா அரசும், சர்வதேச விமான போக்குவரத்தை அடுத்த ஒரு வாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…