காலா பட இயக்குநரான பா. ரஞ்சித் அவர்களின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பா. ரஞ்சித். மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் தன்பக்கம் திரும்பி பார்க்க செய்தார். அதனையடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி மற்றும் காலா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இயக்குநராக கலக்கிய இவர் ஒரு சில படங்களை தயாரித்தும் வெற்றியை கண்டார். ஆம் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஆர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சல்பேட்டா என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு வடக்கு சென்னை குத்து சண்டை வீரர்களை மையமாக கொண்டு உருவாகும் படமாகும். இதில் ஆர்யா குத்து சண்டை வீரராக களமிறங்குகிறார். இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலம் புரொடக்ஷன் தயாரிக்கும் பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் இன்றைய பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…