ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து அட்லியின் அந்தகாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கியது. மேலும் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் தியேட்டர்கள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் பல படங்களை ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகியது. அதனையடுத்து கீர்த்தி சுரேஷின் பெங்குயின் படத்தையும் அமேசான் பிரேமில் ரிலீஸ் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அட்லி தயாரிப்பில் உருவாகும் அந்தகாரம் படத்தினை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான Aforapple உடன் இயக்குநர் அட்லி வழங்கும் இந்த படத்திற்கு ‘அந்தகாரம்’ என்ற டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை விக்னராஜன் இயக்க பிரதீப் குமார் இசையமைக்கிறார். மேலும் ஓ2 பிச்சர்ஸூடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேலும் சுதன் சுந்தரம், பிரியா அட்லி, ஜெயராம், கே. பூர்ணா சந்திரா மற்றும் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ. எம். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கைதி பட வில்லனும், மாஸ்டர் பட நடிகருமான அர்ஜுன் தாஸ் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வினோத் கிஷன், பூஜாராமசந்திரன், மிஷா கோஷால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக கூறியதற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…