உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் தொடங்கி, தொடர்ந்து 210 நாடுகளை பாதித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 ஆயிரத்து 967 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று இந்த நாட்டில் கண்டறியப்பட்ட நாள் முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே மாதம் 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடியே இருக்கவும் என்றும், மே 11-ம் தேதி புதிய கட்டம் தொடங்கும். அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் எனவும் அப்போதைய நிலைமையின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…