நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தின் டீசர் ருகின்ற 7 ஆம் தேதி மாலை 6.12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். தேவ ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார்.
புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதும்,கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டீசர் வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6.12 மணிக்கு வெளியாகும் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…