தல 61 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தை இயக்கப் போவதும் ஹெச்.வினோத் என்பது உறுதியாகிவிட்டது. ‘வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த படத்துக்கான ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அஜித் . மேலும் தல 61 படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் த்ரில்லர் கதையை கொண்ட படமாக இருக்கும் என்றும் படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…