அனுமன் உதவியது போல எங்களுக்கும் உதவி செய்யுங்கள் – பிரதமருக்கு பிரேசில் அதிபர் கடிதம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவறை 14,41,589 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் 3,08,549 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.

இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு கடந்த வாரம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை இருந்ததால் அமெரிக்காவிற்கு மருந்தை அனுப்பாமல் இருந்தது. இதனால் அதிபர் ட்ரம்ப் மருந்து அனுப்பினால் பாராட்டு, இல்லையென்றால் பின்விளைவு ஏற்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். 

இதனையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி பாராசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து இராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரைக் காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களைக் காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

27 seconds ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

33 minutes ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

1 hour ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

2 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

3 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

3 hours ago