காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுகிகி என்ற கிராமத்தில் இருக்கும் மலை ஒன்றில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான, காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுகிகி என்ற கிராமத்தில் இருக்கும் மலை ஒன்றில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி கிராமம் முழுவதும் தீயாய் பரவியதையடுத்து, கோடாரி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலைப்பகுதிக்கு மக்கள் விரைந்தனர். அங்கு மண்ணை தோண்டி போட்டி போட்டுக்கொண்டு மக்கள் தங்கத்தை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின் அதனை பையில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றனர். மக்கள் அவர்கள் எடுத்த அந்த மண்ணை தண்ணீரில் போட்டு, தங்க தாதுக்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்தனர்.
இதனையடுத்து, பத்திரிகையாளர் ஒருவர் இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், இதுகுறித்து தகவல் அரசுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து அப்பகுதி அந்த மலையில் மண்ணை தோன்றுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் இந்த மலை முழுவதும் தங்கம் இருக்கலாம் என்று எண்ணி, மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மக்கள் தங்களுக்கு வேண்டிய அளவு தங்கத்தை பெயர்த்து எடுத்து சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…