AdiyaeTrailer [file image]
‘ஏண்ட தலையில என்ன வெக்கல’ மற்றும் ‘திட்டம் இரண்டு’ படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கிய படம் ‘அடியே’. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, இயக்குனர் வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன், மதுமகேஷ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோருடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது, இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ட்ரைலரின் தொடக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘யோஹன் அத்தியயம் ஒன்று’ படத்தின் 150வது நாளைக் கொண்டாடும் விழாவில் கேப்டன் விஜயகாந்த் கலந்துகொள்ள இருக்கிறார் என்று புரியாத புதிராகவும் வித்தியாசமாக காமெடி கலந்த வேடிக்கையாகவும் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் இதுவரை இல்லாத வகையில், முற்றிலும் மாறுபட்ட கதைக் களமாக அமைந்துள்ளது. இந்தபடத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக கோகுல் பெனாய் மற்றும் எடிட்டராக முத்தயன் யு ஆகியோர் பணியாற்றுகின்றனர். இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…