ஜப்பானின் ககோஷிமா மற்றும் ஒக்கினாவா நகரங்களுக்கு இடையே மையம் கொண்டுள்ள “ஹைஷென் புயல்” தெற்கு ஜப்பானில் கடந்த சென்ற பிறகுபோக்குவரத்து முடங்கியது. புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன, பெரும்பாலான உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 10 விமான நிலையங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று அல்லது நாளை ஜப்பானில் கியுஷு தீவை டைபூன் “ஹைஷென் புயல்” கடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், ஜப்பானில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த புயல் காரணமாக, 22 ஆயிரம் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று புயலின் வேகம் மணிக்கு 252 கிமீ (157 மைல்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புயலை சுனாமியுடன் ஒப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உருவான “மேசக் “புயலால் ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியது. மேசக் புயல் கடந்து செல்லும்போது ஒரு கால்நடை சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.
இந்த கப்பலில் பயணம் செய்த 43 பணியாளர்களில் இருவர் மீட்கப்பட்டனர் மற்றும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இந்த கப்பல் நியூசிலாந்திலிருந்து 5,800 மாடுகளை சீனாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…