சியான் விக்ரம் அவர்களின் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கோப்ரா படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ என்ற அழகான பாடல் வெளியாகியுள்ளது. விவேக் மற்றும் ஜிதின் ராஜ் வரிகள் எழுத ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க ஸ்ரேயா கோஷால் மற்றும் நகுல் அபயங்கர் பாடியுள்ளனர்.தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…