வரலாற்றில் இன்று(26.03.2020)…. பாகிஸ்தானிடமிருந்து வங்கதேச விடுதலை அறிக்கை அறிவித்த தினம் இன்று…

Published by
Kaliraj

நம் பங்காளி நாடான பாகிஸ்தானிடமிருந்து  1971 ஆம் ஆண்டு தான் வங்கதேசம் என்ற ஒரு நாடு  விடுதலை அடைந்து, வங்காளதேசம் எனும் தனி நாடாக விளங்குவதற்கு முன்பு வரை  1947 முதல் 1971 முடிய பாகிஸ்வ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினை வரை, இந்திய வரலாறு வங்கதேசத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. பிரித்தானிய ஆட்சியின் போது, கிழக்கு வங்காளம் என அழைக்கப்பட்ட, தற்கால வங்காளதேசம், இந்தியப் பிரிவினைக்கு பின்னர் பாக்கிஸ்தான் நாட்டின் கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் 1947 முதல் 1971 முடிய இருந்தது. இந்திய விடுதலையின் போது முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் தனி நாடு கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அரசு ஜான் ரெட்கிளிப் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து முஸ்லீல் வசிக்கும் பகுதிகளை தனியாக பிரித்து பாகிஸ்தான் என பெயரிட்டனர். அப்போது தற்போதைய வங்கதேசம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ஆனது. பின்,  1971இல் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து தனி சுதந்திர வங்காளதேசமாக மலர, சேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் தனி வங்காளதேச சுதந்திர நாடு அறிக்கை 26 மார்ச் 1971 அறிவிக்கை வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முக்தி வாகினி என்ற மக்கள் அமைப்பு போராட்டங்கள் செய்த போது பல லச்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இதனால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடும் கோவமடைந்தார்.  இந்தியாவும் வங்காளதேச மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவியதால், பாகிஸ்தான் இராணுவம், இந்தியா மீது போர் தொடுத்தது. போரில் பாகிஸ்தானிய இராணுவம் வங்க மக்களையும், அறிவாளிகளையும் கொன்றது. இறுதியில் பாகிஸ்தான் இராணுவம், இந்திய இராணுவத்திடம்  படுதோல்வி அடைந்து சரண் அடைந்ததால், 16 டிசம்பர் 1971 முதல் வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. சேக் முஜிபுர் ரகுமான் தலைமையிலான புதிய வங்காளதேச அரசை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா ஆகும். வங்கதேச விடுதலை அறிக்கை விடப்பட்ட நாள் வரலாற்றில் இன்று…

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

27 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

53 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago