தற்போது உள்ள குழந்தைகள் அதிகமாக பாஸ்ட் புட் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் பீட்சா , பர்கர் போன்றவை உணவு பொருள்களை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் கடைகளில் விற்கப்படும் பர்கர் மற்றும் பீசா போன்றவை எந்த வகையான மாவு மற்றும் எண்ணெய்யில் தயாரிக்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் அதிக கவலைப்படுகின்றனர்.
இதனால் தனது குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் சில ஸ்நாக்ஸ் பொருட்களை வாங்கித் தருவது இல்லை. இந்நிலையில் வீட்டிலேயே சிக்கன் பாப்கார்ன் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
சிக்கன்- கால் கிலோ
கார்ன் ஃ ப்ளவர்- 2 மேஜைக்கரண்டி
முட்டை -1
பிரெட் தூள் -1 கப்
உப்பு- தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது- 3/4 தேக்கரண்டி
மிளகுத் தூள்-1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்-3/4 தேக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு பௌலில் மிளகாய்த்தூள் , இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். வெட்டி வைத்த சிக்கனை பௌலில் கலந்து வைத்துள்ள மசாலா பொருட்களுடன் கலந்து கொள்ளவும் .
அதனுடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவ தடவ வேண்டும். மேலும் அதில் முட்டை சேர்த்துக் கொள்ளவும். ஒவ்வொரு சிக்கன் துண்டையும் பிரெட் தூளில் தொட்டு வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும். பிரெட் தூளில் தொட்டு வைத்து உள்ள சிக்கன் துண்டை மொத்தமாக எண்ணெயில் போட்டு பொரிக்காமல் ஒவ்வொரு சிக்கன் துண்டை எடுத்து பொரிக்கவும் .
சிக்கன் துண்டுகள் பொன்னிறமாக வரும் வரை பொறுக்கவும், பின்னர் சிக்கன் துண்டுகளை தக்காளி சாஸுடன் குழந்தைகளுக்கு பரிமாறவும்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…