தலைவி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?

தலைவி திரைப்படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோ நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தலைவி”. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வெளியான நாளிலிருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மூன்று மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவது எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 1.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் இந்த படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025