முருங்கைக்காயை வைத்து பிரியாணி செய்வது எப்படி…? வாருங்கள் அறியலாம்..!

Published by
Rebekal

பிரியாணி என்றாலே பெரும்பாலும் பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. சிக்கன், மட்டன் அல்லது காய்கறிகளை வைத்து பிரியாணி செய்வது தான் வழக்கமாக நாம் சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் வெறும் முருங்கைக்காயை வைத்து மட்டும் பிரியாணி சுவையாக செய்ய முடியும்  என்பது உங்களுக்கு தெரியுமா? எளிதில் அட்டகாசமான முறையில் முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய்
  • தயிர்
  • வெங்காயம்
  • பச்சைமிளகாய்
  • பாஸ்மதி அரிசி
  • பன்னீர்
  • நெய்
  • உப்பு
  • எண்ணெய்
  • இஞ்சி
  • பூண்டு
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • முந்திரிப் பருப்பு
  • தனியா தூள்
  • தக்காளி

செய்முறை

விழுது : முதலில் முந்திரிப் பருப்பு, இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தாளிப்பு : அதன் பின்பு குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதன் பின்பு 15 நிமிடம் ஊற வைத்து எடுத்த பாசுமதி அரிசி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடி விடவும்.

சாதம் : லேசாக ஆவி வந்ததும் குக்கரை திறந்து முருங்கைக்காயை இதனுடன் சேர்த்து விடவும். ஏனென்றால் முன்பே முருங்கைக்காயை சேர்த்தால் கரைந்துவிடும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பொரித்து எடுத்து குக்கரில் உள்ள பிரியாணி மீது தூவி கிளறிவிடவும். அவ்வளவு தான் அட்டகாசமான முருங்கைக்காய் பிரியாணி வீட்டிலேயே தயார். ஒரு முறை செய்து பாருங்கள்.

Published by
Rebekal

Recent Posts

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

23 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

47 minutes ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

1 hour ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

2 hours ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

2 hours ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

2 hours ago