மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட விரும்புவார்கள்.அவர்களுக்காக இந்த மாலை வேளையில் ஏத்தம் பழத்தை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூடான பேனில் 1 மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி அது சூடானதும் சிறுது சிறுதாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் உங்களுக்கு பிடித்த எந்த நட் வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்.நன்றாக வதக்கிய 1 நிமிடத்திற்கு பின்னர் அதனை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
அதனையடுத்து அரை மூடி தேங்காயை துருவி வைத்து விட்டு அந்த நெய்யில் தேங்காயின் ஈரப்பதம் போகும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும். இந்த வதக்கிய தேங்காயை பிரிட்ஜில் 2 வாரம் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம் .
அதனையடுத்து ஈரப்பதம் போகும் அளவிற்கு வதக்கிய தேங்காயை பவுல் ஒன்றில் மாற்றி அதில் முன்னதாக வதக்கி வைத்திருந்த முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை இதில் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். அதில் 3 மேஜைக்கரண்டி சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், அதில் கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதனையடுத்து ரொம்ப பழுத்ததும் இல்லாமல் ரொம்ப காயும் இல்லாமல் உள்ள இரண்டு ஏத்தம் பழங்களை இரண்டு துண்டுகளாக நறுக்கி 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும். அதன் வேக வைத்த பழத்தை சப்பாத்தி மாவு போன்று பிசைய வேண்டும். அதுவும் பழம் சூடாக இருக்கும் போதே பிசைந்தால் தான் மிருதுவாக இருக்கும்.
பழத்தின் நடுவிலுள்ள நாரை நீக்கி விட்டு சப்பாத்தி மாவு போன்று சிறுது எண்ணெய் ஊற்றி பிசைந்து பிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். அதன் பின் பிசைந்து வைத்துள்ள பழத்தை உருண்டையாக உருட்டி அந்த உருண்டையின் நடுவில் முன்னதாக கலந்து வைத்துள்ள தேங்காய் துருவலை கொஞ்சமாக வைத்து மூடி வேண்டும். அதன் பின் அதனை நன்றாக உருட்டி விட்டு சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். உருண்டையை மெதுவாக கரண்டியால் எடுத்து போட வேண்டும். பழத்தின் இருபுறமும் பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து பொரித்து எடுக்க வேண்டும். 5 நிமிஷத்தில மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…