இன்று முட்டைக்கோஸை வைத்து எளிமையாக கடையில் உள்ளது போல் காளான் மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ, மைதா – அரை கப், கான்பிளவர் மாவு – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம்மசாலா – 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்: எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – 1 கைப்பிடி, தக்காளி – 1, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன்.
செய்முறை: முதலில் முட்டைகோஸ், மைதா, கான்பிளவர் மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம்மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பகோடா பதத்திற்கு இந்த மாவு இருக்க வேண்டும். கழுவிய முட்டைகோஸ் என்பதால் நிறைய தண்ணீர் தேவைப்படாது, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இதில் காளான் சேர்த்தும் செய்யலாம், சேர்க்காமலும் செய்யலாம். வீட்டில் காளான் இருந்தால் சிறியதாக நறுக்கி அதனை இந்த கலவையுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த பகோடா மாவை தயார் செய்த பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் இந்த மாவை சிறிது சிறிதாக பகோடா போன்று போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்க வேண்டும். பின்னர் இதற்கான மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில் அடுப்பில் கடாயை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் கருவேப்பிலை 1 கைப்பிடி சேர்த்து கொண்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
இதனிடையே தனிப்பாத்திரத்தில் டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொள்ளுங்கள். தக்காளி நன்கு வதங்கியவுடன் நீங்கள் கரைத்து வைத்துள்ள மாவை இதில் சேர்க்க வேண்டும். இது நன்கு கொதித்து கெட்டியானதும் இதனுடன் மேலும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இது கொதித்தவுடன் இதில் நீங்கள் செய்து வைத்துள்ள முட்டைகோஸ் பக்கோடாவை உதிர்த்து சேர்த்து, கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடலாம். அவ்வளவு தான் சூடான சுவையான ரோட்டுக்கடை ஸ்டைலில் இருக்கும் காளான் மசாலா வீட்டிலேயே எளிமையாக தயார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…