விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் படத்தில் வேதா கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளார்.
புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவ்கள் வெளியாகியுள்ளது. முன்பே இந்த தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இது உறுதியாகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…