உக்ரேனில் 13-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள்ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும், அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரேனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைன் அதிபர் அவ்வப்போது தொலைக்காட்சி வழியாகவும், வீடியோ மூலமாகவும் பொதுமக்களிடம் உரையாடி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் நான் கீவ் நகரில் உள்ள பாங்கோவா தெருவில் இருக்கிறேன் என்று தனது முகவரியை வெளியிட்டு, நான் ஒளிந்து கொள்ளவில்லை நான் யாருக்கும் பயப்படவில்லை, தேச பக்தியுடன் போராடும் எங்களை இந்த போர் வெற்றி அடைய செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…