எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து காய்ச்சல் குறைந்ததாகவும், இரண்டு தினங்களில் வீடு திரும்பி விடுவேன் என்று கூறிய அவருக்கு கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பாடி கோடிகணக்கான மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று கேள்விப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…