தான் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை வாணிபோஜன் தெரிவித்துள்ளார்.
தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது ” திரைப்படங்களில் நடிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம், இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க டிவி சீரியல்களுக்கு பொருந்தாது ஒரு கதாபாத்திரத்தில் தொடங்கி 5 வருடங்கள் நடிக்க வேண்டியிருக்கும். ஹீரோவை சுற்றி அதிக நேரம் செலவிடும் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பவில்லை ஒரு நடிகையாக எனக்கு சவாலான சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.” என தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…