நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது வெப் சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், சில நேரம் கதாபாத்திரங்கள் கடினமாக இருக்கும். நினைத்த மாதிரி திரையில் வராமல் போனால் அதில் நடித்தவர்களை விமர்சிப்பார்கள். நினைத்த மாதிரி நடிப்பு அமைந்துவிட்டால் பாராட்டுகள் குவியும். சூப்பர் டீலக்ஸ் படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்னால் இப்படித்தான் யோசித்தேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கதாபாத்திரத்தை ஏற்கும்போதே கொஞ்சம் துணிச்சலாகவும், எதிர்மறை தன்மையோடும் இருப்பதை உணர்ந்தேன். அதில் சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. நடிப்பு சரியாக இல்லை என்றால் ரசிகர்கள் திட்டுவார்கள் எனவே நடிக்கலாமா? வேண்டாமா? என்று பயந்தேன்.
மேலும், இறுதியில் நடிப்பது என்று முடிவு செய்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. மாறாக சிறந்த நடிகை விருது கிடைத்தது. இந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவமாக இருந்தது என கூறியுள்ளார்.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…