கொரோனா தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மையை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வைத்து தான் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போவதாக ஜோ பைடன் அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஜனவரி மாதம் பதவி இவர் ஏற்கவுள்ள நிலையில், முதன்முறையாக தற்பொழுது ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது பேசிய ஜோ பைடன், தான் அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயம் முக கவசம் அணியும் படி கேட்டுக் கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை மக்களுக்கு உணர்த்துவதற்காக கொரானாவிற்க்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி வந்தவுடன் மக்கள் முன்னிலையில் தான் தடுப்பூசி போட்டு கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபரான ஒபாமா, புஷ் மற்றும் கிளின்டன் ஆகியோர் மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டு கொள்வதாக கூறி நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…