முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு பேசிய வீடியோ வைராகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய யோகி பாபு ” படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி..15 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாக்யராஜ் ஆபீஸ் வாசலில் வாய்ப்பு கேட்டு பல நாள்கள் நின்று இருக்கிறேன்…சித்து +2 படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன்.. ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பேன்..நான் இப்போ பிஸியாக இருக்கேன். அதுக்காக எனக்கு வாய்ப்பு கொடுத்த அவர மறக்க முடியுமா..? பாக்காமல் போனா அது தப்பு இல்லையா… அதான் நான் இங்கு வந்தேன்..நான் மிகவும் ரசிக்கும் இயக்குனர் அவர்..அவருடைய பையன் படம் நடிக்கும் போது எனது பக்கத்திலிருந்து ஒரு சிறிய சப்போர்ட்காக இந்த படத்தை நான் செய்தேன்.. சாந்தணு இன்னும் எத்தனை படங்கள் நீங்க பண்ணாலும் நான் மீண்டும் மீண்டும் உங்க கூட நடிப்பேன்..” என தெரிவித்துள்ளார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…