விமல் நடிப்பில் உருவாகியுள்ள கன்னிராசி திரைப்படத்தினை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் விமல் நடிப்பில் நேற்று வெளியாகவிருந்த திரைப்படம் கன்னிராசி .இந்த படத்தின் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமையை படத்தின் தயாரிப்பாளரான ஷமீன் இப்ராஹிம் மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.அதற்கு மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீத் ரூ.17 லட்சத்தை தயாரிப்பாளருக்கு வழங்கியுள்ளார் .
தயாரிப்பாளர் அளித்த ஒப்பந்தத்தின் படி திரைப்படம் 2018-க்குள் வெளியாகவில்லை.இந்த நிலையில் படத்தினை நேற்று வெளியிட படக்குழுவினர் அறிவித்ததுடன், படத்தின் விநியோக உரிமையை வேறொரு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் வழங்கியுள்ளார் .இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீத் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் படத்தின் விநியோக உரிமைக்காக ரூ.17 லட்சத்தை தங்களிடம் பெற்று கொண்டு தற்போது அதனை வேறு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் ,எனவே தன்னிடம் பெறப்பட்ட தொகையுடன் வட்டியுடன் சேர்த்து ரூ.21 லட்சத்து 8 ஆயிரம் தயாரிப்பு நிறுவனம் வழங்கி வேறொரு நிறுவனம் மூலம் படம் வெளியிடுவதை தடை செய்யுமாறு கூறியிருந்தார்..
இதனை விசாரித்த நீதிமன்றம் ,கன்னிராசி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன் , இதுகுறித்து டிசம்பர் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு கிங் மூவி மேக்கர் நிறுவன தயாரிப்பாளர் ஷமீம் இப்ராஹிமுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…